கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வில் கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தையல் தெரிந்த மிதமான மனவளர்ச்சி குன்றியோர், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் தாய்மார்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு குறைந்தப்பட்சம் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்விற்கு வரும் போது மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்கள், தையல் பயிற்சி சான்று, புகைப்படம் 1 கொண்டுவர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் பிற அரசுத்துறைகள் மூலம் ஏற்கெனவே தையல் இயந்திரம் பெற்றிருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago