திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்லக்கூடிய பயணிகள் பிற நாடுகளின் கரன்சிகளை இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்வதற்காக விமானநிலைய முனையத்தில் பணப் பரிமாற்றம் மையம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இங்கு முறையாக வரி செலுத்தி பணப் பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக, முனை யத்தின் வெளி பகுதியில் நிற்கக் கூடிய சில புரோக்கர்கள் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்து வந்தனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனிடம் விமானநிலைய இயக்குநர் தர்மராஜ் புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீஸார் நேற்று திடீரென விமானநிலைய வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்த ஏர்போர்ட் பாரதிநகரைச் சேர்ந்த பிரசாந்த்(38), ஸ்டார் நகரைச் சேர்ந்த முத்து(43), ரவிசந்திரன்(47), செம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாகுல்அமீது(38), உடையான் பட்டியைச் சேர்ந்த ரசாக்(35) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago