கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் தற்கொலை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் புள்ளான்விடுதியைச் சேர்ந்தவர் ரெத்தினம் மகன் ராமன்(38).இவர், மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உத வியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த சில ஆண்டுகளாக மாற்றுப் பணியாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில், இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று ஆலங்குடி வட்டாட்சியர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்