திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூரில் ரூ.25.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலையை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
மண்ணச்சநல்லூர் நகருக்குள் செல்லாமல் துறையூர் சாலையை இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மண்ணச்சநல்லூர் சாலையில் பங்குனி ஆற்றுப் பாலம் முதல் துறையூர் சாலையில் பூனாம்பாளையம் வரை 2.64 கிலோ மீட்டர் தொலைவுக்கு 13.50 மீட்டர் அகலத்தில் ரூ.25.15 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையில், பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் குறுக்கே இரு பாலங்களும், பாசன கால்வாய்களின் குறுக்கே 14 சிறு பாலங்களும், 4 சிறு மழைநீர் வடிகால் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த பணிகள் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலை யில், பணிகள் முன்னதாகவே முடிக்கப்பட்டு, மக்கள் பயன் பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த புறவழிச்சாலை அமைக்கப் பட்டுள்ளதால் மண்ணச்சநல்லூர் நகரில் ஏற்படும் வாகன நெரிசல் தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வடிவேல் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago