தேர்தலுக்கு நிதி திரட்டும் ஒரே கட்சி மதிமுகதான் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் வைகோ கருத்து

By செய்திப்பிரிவு

தேர்தலுக்காக நிதி திரட்டும் ஒரே கட்சி மதிமுக மட்டுமே என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மதிமுக சார்பில் மாவட்ட வாரியாக தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கட்சி அமைப்பில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட் டங்களின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் ரூ.13.50 லட்சம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் ரூ.11.75 லட்சம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.3.79 லட்சம், புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம், அரியலூர் மாவட்டம் சார்பில் ரூ.6.39 லட்சம், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் ரூ.5 லட்சம், கரூர் மாவட்டம் சார்பில் ரூ.11 லட்சம் என ரூ.61.43 லட்சம் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டது.

அப்போது வைகோ பேசிய தாவது: மற்ற கட்சிகளிடமெல்லாம் நிதி கொட்டிக் கிடக்கிறது. தற் போதுள்ள சூழலில் தேர்தலுக்காக நிதி திரட்டும் ஒரே கட்சி மதிமுக மட்டுமே. மக்களின் எந்தவொரு பிரச்சினைக்காகவும், களத்தில் இறங்கி போராடும் கட்சியாக இருப்பதால்தான் மக்களும் நமக்கு நிதி அளிக்கின்றனர். கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள காலத்திலும்கூட, நமக்கு இவ்வளவு நிதி கிடைத்துள்ளது மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே, மக்களுக்காக போராடுவதில் முதலிடத்தில் இருப்பது மதிமுகதான். இந்த கட்சியை எஃகு கோட்டையாக மாற்ற தேர்தலுக்குப் பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மகளிரணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு (திருச்சி மாநகர்), டிடிசி சேரன் (திருச்சி வடக்கு), மணவை தமிழ்மாணிக்கம் (திருச்சி தெற்கு), சின்னப்பன் (அரியலூர்), முன் னாள் அமைச்சர் சந்திரசேகர் (புதுக்கோட்டை), கபினி சிதம்பரம் (கரூர்), அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மைக்கேல்ராஜ், மாநில விவசாய அணிச் செயலாளர் புலவர் முருகேசன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்