திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்ட தமாகா மாணவரணி ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாணவரணி மாநிலத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் முருகேசன், ஜோதி, குருதேவ், செல்வம், மாநிலச் செயலாளர்கள் என்.டி.சார்லஸ், ஏ.பி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிலால் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறோம். 25 சீட் கேட்டுள்ளோம். எங்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும். பயிர்க்கடன் தள்ளுபடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மினி கிளினிக் திட்டம் என்று அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசின் சாதனை களைச் சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago