நெல்லையில் 2-ம் தவணையாக கரோனா தடுப்பூசி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றை தடுப்பதற்கான 2-ம் தவணை தடுப்பூசி போடும் பணி திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர் களுக்கும், 2-ம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட தொற்றா நோய் உள்ளவர்களுக்கும், 4-ம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 200 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்துக்கு 15,100 டோஸ் ஊசிமருந்து வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு, 2-வது தவணையாக தடுப்பூசி நேற்று போடப்பட்டது. திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத் துக்கு 15,100 டோஸ் ஊசிமருந்து வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்