சங்கரன்கோவில் ஆவுடைப்பொய்கையில் 5 ஆண்டுகளுக்கு பின் தெப்பத் திருவிழா

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தெப்பத் திருவிழா நடைபெறும் ஆவுடைப்பொய்கையில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு ஜனவரியில் பெய்த தொடர் மழையால் தெப்பத்தில் நீர் நிரம்பியது. இதையடுத்து இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆன்மிக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெப்பத் திருவிழாவை நடத்த தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.

தெப்பத்தில் நீர் நிரம்பினாலும் பற்றாக்குறையாக இருந்ததால் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 11 முறை வலம் வந்து காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல், தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவில் தெப்பத்திருவிழா நடை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்