தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கல் தொடர்பாக வேலூர் ஆண்கள், பெண்கள் சிறையில் காவல் துறையினர் சோதனை

By செய்திப்பிரிவு

வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும்பெண்கள் தனிச்சிறையில் தடை செய்யப் பட்ட பொருட்கள் ஏதாவது பதுக்கப் பட்டுள்ளதா? என்பது குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையி லான குழுவினர் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும்விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். அதேபோல், பெண்கள் தனிச் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன் பாட்டை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் சிறைக்குள் திடீர் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் (பொறுப்பு) மகேஷ் தலைமையில் சுமார் 80 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தயாராகினர். துணை காவல் கண்காணிப் பாளர் மகேஷ் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் ஆண்கள் மத்திய சிறையிலும், ஒரு பெண் காவல் ஆய்வா ளர் தலைமையில் 30 பெண் காவலர்கள் அடங்கிய குழுவினர் பெண்கள் தனிச் சிறையிலும் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி 8 மணி வரை சிறைச் சாலையின் அனைத்து தொகுதிகள் மற்றும் பூங்கா, சமையல் அறை என பல்வேறு இடங்களில் சோதனையிட் டனர். காவலர்கள் சோதனை நடத்த வசதியாக சிறைவாசிகள் அனைவரும் அவர்களின் அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, பீடி, சிகரெட், குட்கா, செல் போன், சிம்கார்டு, இரும்பு உலோக பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட் கள் எதுவும் சிக்கவில்லை என்று காவல் துறை அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. மேலும், சிறை நிர்வாகம் பரிந்துரையின் அடிப்படையில் 3 மாதங் களுக்கு ஒரு முறை இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கம் என்றும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்