கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 325 வாக்குச்சாவடிகள்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூடுதலாக 325 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பான முறையில் தேர் தலை நடத்தி முடிக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட் டுள்ளது.

அதன்படி, 1,050 வாக்காளர் களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாகப் பிரித்து துணை வாக்குச்சாவடி அமைக் கவும், பள்ளிகளில் பழுதடைந்த பழைய கட்டிடங்களில் இயங்கி வந்த வாக்குச்சாவடியை புதிய கட்டிடங்ளுக்கு இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படவுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 1,122 வாக்குச் சாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கூடுதலாக 325 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் மொத்த வாக்குச்சாவடி களின் எண்ணிக்கை 1,447-ஆகஅதிகரிக்க உள்ளது. துணை வாக்குச்சாவடிகளுடன் கூடிய புதிய வரைவு துணை வாக்குச் சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று வெளியிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளி யிடப்பட்ட இந்த பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அனைத்துத் தரப்பி னரும் தெரிவிக்கலாம். வரைவு துணை வாக்குச்சாவடி பட்டியலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம், வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிட லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்