கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தி, இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கட்டுனர் சங்கத்தினர் கூறும்போது, பொருட்களின் விலை உயர்வினால், ஏழை எளிய மக்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே மாறி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தெரிவித்தனர். கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை ஆணையம்
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், கட்டுமானத் தொழிலுக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தியும், அகில இந்திய பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் தென்னரசு பேசியதாவது:கரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் கட்டுமானத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மேஸ்திரி கூலி ரூ.600-லிருந்து ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் மற்ற தொழிலாளர் களின் கூலியும் உயர்ந் துள்ளது. ஒரு மூட்டை சிமென்ட் ரூ.280-ல் இருந்து ரூ.340 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் கம்பிக்கு ரூ.15 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.
பொருட்கள் விலை உயரும்போது அதற்கு ஈடாக ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வழிவகை செய்யும் வகையில் கட்டுமானத் தொழிலுக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க புரவலர் கணேசன், துணைத்தலைவர் தேவராஜ், இணை செயலாளர் இளையராஜா, பொருளாளர் குணசேகரன், முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், மணி, நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் தென்னரசு பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago