திமுக ஆட்சியில் தீட்டப்பட்டத் திட்டங் களுக்கும் சேர்த்து உரிமை கோரி பொய் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டையில் நேற்று, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில், பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்த, திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
விளம்பரங்கள் மூலம், பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாக முதல் வர் பழனிசாமி தெரிவித்து வருகிறார். ஆனால் அவை திமுக ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள். அத்திக்கடவு அவினாசி திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், முதல்வர் காப்பீட்டுத் திட்டம், 108ஆம்புலன்ஸ், குடிமராமத்துப் பணி,சென்னை மெட்ரோ ரயில், காவிரி ஆணையம் அனைத்தும் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது. அதற்கும் சேர்த்து உரிமை கொண்டாடுகிறார் பழனிசாமி. இவர்களது ஆட்சியில் எந்த திட்டமும் தீட்டப்படவில்லை.
‘கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது’ என்கிறார். இதுவரை யிலும் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாகத் தானே போடப்பட்டு வந்தது.
சாதனையா..? வேதனையா..?
டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய முன்வராதது ஏன்? தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, ‘மின்மிகை மாநிலம்’ என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ‘பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்’ என்று கோவையிலும், சென்னையிலும் அந்நகரங்களை குறிப்பிட்டுப் பேசியி ருக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா, இவர்களின் பாது காப்புக்கு.`சாதனை’ என்று சொல்ல அதிமுகவிற்கு எதுவுமில்லை. ‘சாதனை’ என்று கூறும் விளம்பரங்கள் அனைத்தும் ‘வேதனை’ விளம் பரங்களே. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாதது மட்டுமின்றி, இருந்த வேலை வாய்ப்புகளையும் ஏராளமானோர் இழந்துள்ளனர். தமிழகம் வெற்றிநடை போடுவதாக அவர் அளிக்கும் விளம்பரம், ‘வெற்றி நடை’ அல்ல, ‘வெற்று நடை’யே, விரைவில் திமுக ஆட்சியில் ‘கெத்து நடைபோடும் ஆட்சி’ அமையும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் களை சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான உதயசூரியன் வரவேற்றார். ரிஷிவந்தி யம் சட்டபேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான வசந்தம் கார்த்திக்கேயன் நிகழ்ச்சி குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக, விழுப்புரம் அருகே யுள்ள காணைகுப்பம் கிராமத்திலும் மத்திய மாவட்ட திமுக சார்பில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்வில் திமுக மாநில துணைச் செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago