கொள்ளையர்களை ஒரே நாளில் பிடித்த போலீஸாருக்கு எஸ்பி பாராட்டு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டி மனைவி செங்காயி. இவர் பிப்.9-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் பின்புறமாக வந்த 5 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி செங்காயி அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். திருப்பத்தூர் நகர் போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி பொன் ரகு தலைமையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்ஐ சந்திரன் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் திருப்பத்தூர் நாட்டார்மங்கலம் குணசேகரன் (43), திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (30), மதுரை வண்டியூர் மணிகண்டன் (28), அண்ணாநகர் ஆனந்த் (35), ஆனையூர் பூபதி (38) ஆகியோர்ஈடுபட்டது தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ஒரே நாளில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ரோஹித்நாதன் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்