நாமக்கல்லில் 19-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

By செய்திப்பிரிவு

நாமக்கல்லில் வரும் 19-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின்திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபார்டு வங்கியின் வேளாண்மை அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ், நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் வரும் 19-ம் தேதி காலை 9 மணிக்கு ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

முகாமில் கோழிகளை தேர்வு செய்தல், கொட்டகை அமைப்பு, கோழிக்குஞ்சுகள் பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு மேலாண்மை, குடல்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல் மற்றும் விற்பனை உத்திகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்