புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் இலக்கு: அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் லெக்கணாப்பட்டி ஊராட்சி பாதிப்பட்டியில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:

மாவட்டத்தில் இதுவரை 80 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 120 நாட்களில் விவசாயிகளிடம் இருந்து 56,844 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மோகன், கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்