திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளின் தர மேம்பாடு மற்றும் காப்பீடு குறித்த மருத்துவர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங் களிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்றனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
நலப்பணிகள் இணை இயக்குநர் கே.நெடுமாறன் முன்னிலை வகித்தார். குடும்ப நலத்துணை இயக்குநர் எம்.ராமநாதன் வரவேற்றார். மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் எம்.முருகன் தொகுத்து வழங்கி னார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு துறை தலைவர் எஸ்.ராமலட்சுமி, இணை பேராசிரியர் எஸ்.சுஜாதாசெந்தில், மயக்கவியல் துறை தலைவர் ஆர்.அமுதா ராணி, அறுவை சிகிச்சை துறை தலைவர் அலெக்ஸ் ஆர்தர் எட்வர்டு, குடும்பநல செயலக உதவியாளர் சு.செந்தில்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago