திருவண்ணாமலையில் பாலீஷ் போடுவதாக கூறி வெள்ளி கொலுசை பறித்துக் கொண்டு தப்பியோடிய பிஹார் இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
தி.மலை நகரம் போளூர் சாலை, பச்சையம்மன் கோயில் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளி நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக கூறி வட மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்று சுற்றி வந்துள்ளனர்.
அந்த கும்பல், செட்டிக்குள மேட்டில் வசிக்கும் ரவி மனைவி கலையரசியிடம் வெள்ளி கொலுசை பெற்று பாலீஷ் போடுவது போல் நடித்துள்ளனர்.
பின்னர் அவர்கள், திடீரென ஒரு பொடியை தூவி புகை மூட்டத்தை ஏற்படுத்தி, வெள்ளி கொலுசை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றனர். அவர்களை, பொது மக்கள் விரட்டி சென்றபோது, ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
பிடிபட்ட நபரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, அவர் பிஹார் மாநிலம், சுல்போல் மாவட் டத்தைச் சேர்ந்த நிர்மல் ஷா மகன் விகாஷ்குமார்(21) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தி.மலை நகர குற்றப்பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரி வித்தனர். ஆனால், அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சம்பவ இடத்துக்கு சென்று பிடிபட்ட இளைஞரை, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இது குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து பிஹார் இளைஞர் விகாஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago