குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் காவேரிப்பாக்கத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் போர்க்கால அடிப்படையில் பணியை முடிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருத்தணி நகராட்சிக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி தாமதமாக நடைபெறுவதை கண்டித்து, காவேரிப்பாக்கத்தில் அனைத்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருப்பாற்கடல் பாலாற் றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதிக்கு சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக, காவேரிப்பாக்கம் பஜார் தெரு வழியாக பெரிய அளவிலான குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடை பெறுவதால், பகல் நேரத்தில் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், கடைகளுக்குள் புழுதி பறப்பதால் வியாபாரம் செய்ய முடியவில்லை என வியா பாரிகள் குற்றஞ்சாட்டினர்.

எனவே, குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண் டும் என பேரூராட்சி நிர்வாகத் திடம் வியாபாரிகள் தரப்பில் முறையிட்டுள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்து வியாபாரிகள் சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் நேற்று காலை முதல் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடர்பாக காவேரிப் பாக்கம் அனைத்து வணிகர் நலச் சங்கத் தலைவர் மோகன் கூறும்போது, ‘‘காவேரிப்பாக்கம் பகுதியில் மட்டும் மளிகைக் கடைகள், துணிக் கடைகள், ஹார்டு வேர் கடைகள், உணவகங்கள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குடிநீர் திட்டப் பணிக்காக குழாய் பதிக்கும் பணி தொடங்கி 2 மாதங்களாகியும் இன்னும் முடிவடையவில்லை. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும், வியாபாரம் பாதிக்கப் படும் என்பதால் போர்க்கால அடிப்படையில் குழாய் பதிக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் முறையிட்டோம். இதுவரையும் குழாய் பதிக்கும் பணியில் எந்த வேகமும் இல்லை. கடந்த 2 மாதங்களாக நாங்கள் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம். ஒரே ஒரு பொக்லைன் இயந் திரத்தை வைத்து குழாய் பதிக்கும் பணியை செய்கின்றனர். இரவு நேரத்திலும் பணியை செய்யுமாறு வலியுறுத்தி வருகிறோம். வியா பாரிகளின் நிலையை பார்த்து பணியை துரிதப்படுத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்