16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By செய்திப்பிரிவு

பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் பெங்களூருவுக்கு லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய் யப்பட்டது. இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்ட வழங்கல் துறையின் பறக்கும் படை வட்டாட் சியர் கோட்டீஸ்வரன், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார், உதவி ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கூட்டாக வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிட்டனர்.

இதற்காக, பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு அருகே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 1 மணியளவில் சந்தேகத்துக்கிடமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை யிட்டனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, திருவள்ளூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பவரை கைது செய்தனர். லாரியில் இருந்த 16 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பெங் களூருவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

பின்னர், வேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வேலூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் குறித்தும் யாருக்காக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்