திருக்கோவிலூர் ரயில்வே நிலையத்தில் நேற்று முன் தினம்தெற்கு ரயில்வே பொதுமேலாளர்ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்திருக்கோவிலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண் ணாமலையிலி ருந்து திருக்கோவிலூர் வழியாக தாம்பரம் வரை சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு இயக்கப்படவில்லை. மீண்டும் இயக்கிட வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் இயக்கப் படும் புதுச்சேரி தாதர் எக்ஸ்பிரஸ்ரயிலை வாரத்தில் 5 நாட்கள்இயக்கிடவேண்டும்.
நிழற் குடை அமைத்திடுக
சாலுக்கா எக்ஸ்பிரஸ் மற்றும்தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்ஒரே நேரத்தில் திருக்கோவி லூர் ரயில் நிலையத்திற்கு வருகிறது.இதனால் முதல் நடை மேடையில் முழுமையான நிழற்குடை அமைத்திட வேண்டும். பழு தடைந்துள்ள நிழற் குடையை பழுது நீக்கம் செய்து தர வேண்டும். திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago