திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒலக்கூர், வல்லம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், வானூர் மற்றும் மயிலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நிதியுதவியும், தாலிக்கு தலா 8 கிராம் வீதம் 2 கிலோ 400 கிராம் தங்க நாணயங்களையும் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
இதே போல், விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றவிழாவில் கோலியனூர், காணை,கண்டமங்கலம், விக்கிரவாண்டி, முகையூர் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தலா 8 கிராம் வீதம் 2.400 கிலோ கிராம் தங்க நாணயங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங் கினார். மொத்தத்தில் 600 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 கோடி நிதியுதவியும் தாலிக்கு 8 கிராம் தங்க நாணயங்கள் வீதம் மொத்தம் 4 கிலோ 800 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை கூடுதல்ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், எம்எல்ஏக்கல் வானூர். சக்ரபாணி,விக்கிரவாண்டி முத்தமிழ்ச் செல்வன், திண்டிவனம் சார்- ஆட்சியர் அனு, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago