புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு நேற்று அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் கடந்த 2-ம் தேதி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் தொடங்கியது.
தொடர்ந்து, 9 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருவண்ணா மலை அண்ணாசிலை முன்பு மாவட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் முழக்கமிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago