தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுச் செய லாளர் ஏ.சி.வெங்கடேசன், முதல் வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல் வருக்கு, ஏ.சி.வெங்கடேசன் விடுத் துள்ள கோரிக்கை மனுவில், "வட தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் பாலாற்றின் நீர்வரத்தை கர்நாடகா மற்றும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீர்வரத்தை முற்றிலும் தடுத்து விட்டது.
கடந்த 2000-ம் ஆண்டு மத்திய நீர்வளத்துறை பல்வேறு ஆய்வு களை நடத்தி, 2006-ம் ஆண்டு தென்பெண்ணையில் இருந்து வெளியேறும் 3.5 டி.எம்.சி உபரி நீரை கால்வாய் வழியாக பாலாற்றுடன் இணைக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறிந்து 2008-ம் ஆண்டு அதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.
இதன் மூலம் 59.5 கி.மீ., நீள கால்வாயை நெடுங்கல் அணை யில் இருந்து நாட்றாம்பள்ளி கல்லாறு வரை இணைக்க ரூ.258.50 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென் பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவித்தார். இருப்பி னும், இப் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை போல, தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை தமிழகஅரசு உடனடியாக தொடங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago