வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி பணி ஆணையை வழங்கி ரூ.4 லட்சம் மோசடி செய்த இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கொடுமாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (26). டிப்ளமோ படித்த இவர் வெளி நாட்டில் வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். இதையறிந்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வினோத் (29) அவரது சகோதரர் பிரேம்குமார் (25) ஆகியோர் பிரித்திவிராஜிடம் சிங்கப்பூரில் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம் எனக்கூறி கடந்த 2015-ம் ஆண்டு ரூ.4 லட்சம் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி அதற்கான பணி ஆணையை பிரித்திவிராஜிடம் வழங்கியுள்ளனர். இதையடுத்து, சிங்கப்பூர் சென்ற பிரித்திவி ராஜூக்கு அங்கு சென்றதும் பணி ஆணை போலி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் சொந்த ஊருக்கு வந்த பிரித்திவிராஜ் தான் கொடுத்த பணத்தை வினோத், பிரேம்குமார் ஆகி யோரிடம் திருப்பி கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலுவிடம் நேற்று பிரித்திவிராஜ் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வினோத் மற்றும் பிரேம்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago