விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் இயங்காது
“விழுப்புரம்- புதுச்சேரி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம் தற்போது இல்லை. அதே போன்று, விழுப்புரம்-புதுச்சேரி இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில் சேவையும் தற்போது தொடங்கப்படாது” என்றும் பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் காட்பாடி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களை நேற்று சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தார். காலை 9 மணிக்கு தொடங்கிய ஆய்வுப் பணி மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் கேங் மேன்களுக்கான ஆய்வு அறை, கணினி கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமரா அறை போன்றவைகளின் பயன்பாட்டை பொது மேலாளர் தொடக்கி வைத்தார். மேலும், பயன்படுத்திய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை செலுத்தும் இயந்திரத்தையும் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி ரயில்வே கோட் டத்துக்கு உள்பட்ட காட்பாடி முதல் விழுப்புரம் வரையிலான இருப்பு பாதை மற்றும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்தேன். பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளும், ரயில்வே ஊழியர் களுக்கான வசதிகளும் மேம் படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையும் தரமாக உள்ளது. கரோனா காலத்தில் தமிழகத்தில் சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கரோனா பரவல் நன்கு குறைந்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல்மாதத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிறுத்தப்பட்டவிரைவு ரயில்களில் 72 சதவீத ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பயணிகள் ரயில்கள் (பசஞ்சேர்ரயில்) முழுமையாக தற்போதுஇயக்கப்பட வாய்ப்பில்லை. படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும். சென்னையைப் பொருத்தவரையில் புறநகர் ரயில்கள் முழுமையாக இயக்கப் படுகிறது. இருப்பினும், அதிக நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஆண்களுக்கு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில்களில் முன் பதிவுஇல்லாத பெட்டிகள் (பதிவு செய்யாத பயணச்சீட்டு கொண்டு பயணம் செய்யும்) இணைக்கப்பட வில்லை. முன் பதிவு செய்த அந்த பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யலாம். கரோனா பரவல் காரணமாக, அந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும். திருச்சி கோட்டத்தில், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கரைக்கால் ஆகிய ரயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago