சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக கார்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணிக்கு போக்குவரத்துறையும், காவல்துறையும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்தன. திருச்சி ரயில்வே சந்திப்பு அருகே இப்பேரணியை மாநகர காவல் ஆணையர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட கார்கள் பேரணியாகப் புறப்பட்டு தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற புதிய சாலை வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் பங்கேற்ற கார்களை ஓட்டிய மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தனர்.
இப்பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பிரபாகர் (ரங்கம்), வெங்கடகிருஷ்ணன் (திருச்சி மேற்கு), கஜபதி (திருச்சி கிழக்கு), போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர் விக்னேஸ்வரன், ரங்கம் மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திக் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago