கரூர் ஒன்றியத்தில் ரூ.4.72 கோடி மதிப்பிலான பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.72 கோடி மதிப்பிலான பணிகளை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியம் புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரியவள்ளிபாளையம் மற்றும் பால்வார்பட்டியில் தலா ரூ.21 லட்சத்திலும், வேலாயுதம்பாளையத்தில் ரூ.22.49 லட்சத்திலும், தவுட்டுபாளையத்தில் ரூ.42.47 லட்சத்திலும் விவசாய சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணி, வாங்கல் பகுதியில் ரூ.84.13 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி உட்பட ரூ.4.72 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை அந்தந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி கருப்பம்பாளையத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பாலமுருகன், மண்மங்கலம் வட்டாட்சியர் கண்ணன், வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சித் தலைவர் வசந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE