மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத், மாநில துணைச் செயலாளர் சி.புஷ்பநாதன் உள்ளிட்டோர் 2-வது நாளாக நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 17 பெண்கள் உட்பட 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி முன்னிலையில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டம் தொடங்கிய நிலையில், கிருஷ்ணராயபுரத்தில் அன்று இரவு போராட்டம் கைவிடப்பட்டது. அரவக்குறிச்சியில் 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம் நேற்று மாலை கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்