திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(41). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலுள்ள கட்டிலில் சிகரெட் பிடித்தபடி படுத்திருந்தார். அப்போது அந்த சிகரெட்டை சரியாக அணைக்காமல் கார்த்திக் தூங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் சிகரெட்டிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி கொஞ்சம் கொஞ்சமாக பரவி மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த கார்த்திக்கை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago