தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நேற்று நடைபெற்ற இந்து எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையிலிருந்து கார் மூலம் புறப்பட்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பங்கேற்றால், அப்பகுதியின் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் எனக்கருதிய போலீஸார், திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை அருகே அர்ஜூன் சம்பத்தின் காரை வழிமறித்தனர். பின்னர் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். அதன்பின், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago