100 நாள் வேலைத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கோரி, திருச்சியில் நேற்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை தலைமை வகித்தார்.
மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்ட நிதியை கடந்த ஆண்டைவிட மூன்றில் ஒரு பங்காக குறைத்தது மற்றும் உரம் உள்ளிட்ட விவசாய இடு பொருட்களின் மானியத்தைக் குறைத்தது ஆகியவற்றைக் கண்டித்தும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago