மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் சீர்மரபினர் நலச் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
இரட்டைச் சான்றிதழ் முறையைத் திரும்பப் பெற்று, டிஎன்டி என்ற சான்றிதழை வழங்கக் கோரி திருச்சி உறையூரில் உள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரான எஸ்.வளர்மதியின் வீட்டை முற்றுகையிட சீர்மரபினர் நலச் சங்கத்தினர் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று சென்றனர்.
இதில், பல்வேறு சாதி சங்கங்களின் நிர்வாகிகளான காசிமாயத் தேவர், கேபிஎம்.ராஜா, எஸ்.பிரேம்குமார், சிவசக்தி, முத்துராமலிங்கம், பிரகாஷ், முருகன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அமைச்சரின் வீட்டருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அமைச்சர் எஸ்.வளர்மதி அவர்களை வீட்டில் உள்ள அலுவலகத்துக்கு வரவழைத்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சீர்மரபிரனர் நலச் சங்கத்தினர் அமைச்சரிடம் அளித்த மனுவில், “சீர்மரபின மக்களுக்கு தமிழகத்தில் டிஎன்சி என்றும், மத்திய அரசு தேவைகளுக்கு டிஎன்டி என்றும் இரட்டைச் சான்றிதழ் முறை உள்ளது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையைத் திரும்பப் பெற்று, டிஎன்டி என்ற சான்றிதழை வழங்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago