மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3,000 மற்றும் கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால் தலைமையில் 41 பேர், அரியலூர் அண்ணா சிலை அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 18 பேர் நேற்று மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்