திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை- துவாக்குடி இடையே சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தக் கோரி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பின் சார்பில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலையை 6 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை அளவீடு செய்ய ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைக்காததால் தீர்ப்பு வெளியாகி 15 மாதங்களுக்கு மேலாகியும் நிலம் அளவீடு செய்யும் பணிகள் கூட இன்னும் முடிக்கப்படவில்லை.
நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டு, நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த பணியை தாமதப்படுத்தும் வகையில் செயல்படும் போக்கை வருவாய்த்துறையினர் கைவிட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதற்கு தேவையான கூடுதல் நிதியை ஒரே தவணையில் தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என முற்றுகைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், சண்முகம், நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago