‘கொசு உற்பத்தி இல்லை’ என்ற சுயச்சான்று நிறுவனங்கள் சமர்ப்பிக்க மாநகராட்சி உத்தரவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் டெங்குதடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பருவ காலமானது லார்வா என்னும் கொசுப்புழு உற்பத்தியாகக்கூடிய காலம். டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுப்புழுவானது, சுத்தமான நீரில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. ஆகையால், நல்ல தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களில் ஏடிஎஸ் கொசு புகாத வண்ணம் மூடி வைத்து பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியை முழுமையாக தடுக்க முடியும்.

ஏடிஎஸ் கொசுப்புழுவை ஒழிக்கும்விதமாக, மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களும் தங்கள் வளாகப் பகுதி சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில், `கொசு உற்பத்தி இல்லை’ என்ற சுயச்சான்றினை, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலங்களுக்கு பிரதி வியாழன்தோறும் அனுப்பி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். .

மாநகராட்சி கண்காணிப்பு குழுவினரின் ஆய்வில் கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நல்ல தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்களில் ஏடிஎஸ் கொசு புகாத வண்ணம் மூடி வைத்து பராமரிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்