சாலைகளை சீரமைக்கக் கோரி முதல்வர் வரும்போது போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களிலும் சாலைகள் குண்டும்குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். வாகன ஓட்டிகளின் சிரமத்தை அரசுத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற சிலர் கொசு வலையை மூடிக்கொண்டும், காயங்களுக்கு கட்டுகளை போட்டுக்கொண்டது போல பங்கேற்று கவனத்தை ஈர்த்தனர்.

மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலா ளர் கே.ஜி.பாஸ்கரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்காகவும் குழிகள் தோண்டி உள்ளனர். மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. சாலைகளை செப்பனிடாவிட்டால், அடுத்த வாரம் திருநெல்வேலிக்கு தமிழக முதல்வர் வரும் நாளில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்