வேலூரில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் கலப்பு மருத்துவ சிகிச்சை முறை திட்டத்தை எதிர்த்து, வேலூரில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் வேலூர் கிளை சர்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மருத்துவர் முஸ்தபா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றவர்கள், ‘இந்தியாவில் ஆயுர் வேதம், சித்தா, யுனானி, ஹோமி யோபதி மருத்துவர்கள் ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்ற மத்திய அரசின் புதிய மருத்துவ கொள்கையை கண்டித்தும், மத்திய அரசின் புதிய அறிவிப்பால் இந்திய மருத்துவ முறை பாதிக்கப்படும் என்றும், மத்திய அரசின் புதிய கலப்பு மருத்துவ சிகிச்சை முறை திட்டத்தை கைவிட வலியுறுத்தி யும்’ முழக்கமிட்டனர்.

இதில், இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தினர் வேலூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் ரவிக்குமார், மாவட்டப் பொரு ளாளர் மருத்துவர் பால சுப்பிர மணியன், பெண்கள் மருத்துவ பிரிவு தலைவர் மருத்துவர் காயத்ரி ஆனந்த நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்