இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு செயல் படுகிறது என முதல்வர் பழனிசாமி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆம்பூர், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், திருப்பத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, "தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைய அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கி வருகிறோம். இந்தியாவிலேயே சட்டம் - ஒழுங்கில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ள தாக மத்திய அரசு தேசிய விருதுகளை தமிழக அரசுக்கு வழங்கி யுள்ளது பெருமைக்குரியதாகும்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை அதிமுக அரசு செய்துள்ளது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம் அதிமுக அரசு என்ன செய்தது என கேள்வி கேட்டு, அரசுக்கு எதிராக பொய் யான பிரச்சாரங்களை செய்து வருகிறார். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அதிமுக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதை ஒரு பெட்டியில் போட்டு, தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அந்த பெட்டி திறக்கப்பட்டு, அதிலிருக்கும் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என கூறி வருகிறார். இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த போது ஸ்டாலின் துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது பெற்ற மனுக்கள் மீது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என பட்டியலிட முடியுமா?
இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக அரசு தான் தமிழகத்தில் நடைபெறும். எனவே, அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஸ்டாலினால் அந்த பெட்டியை திறக்கவே முடியாது. பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார் என தெரிய வில்லை. மக்களிடம் நேரில் மனுக் களை பெரும் ஸ்டாலினால் அதை சரியாக படிக்கக்கூட தெரிய வில்லை.
ஒரு கூட்டத்தில், கறவை பசு கேட்டு திருமலை என்பவர் ஸ்டாலினிடம் மனு அளித்தார், மனு அளித்தவர் ஒரு ஆண், அவருக்கு கணவரை தேடி கண்டு பிடித்து தர வேண்டும் என தன் கட்சிக்காரர்களிடம் ஸ்டாலின் உளறுகிறார். நேரில் பெரும் மனுவே இப்படி என்றால், பெட்டி மூலம் பெறப்படும் மனுவின் நிலைமை என்னவென்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கூட இப்படி தான் ஊர், ஊராக சென்று பொதுமக்களிடம் மனு பெற்றார். அந்த மனுக்கள் மீது அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? எல்லாம் நாடகம். ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால், அதிமுக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறது.
அரசுப்பள்ளியில் படித்த மாண வர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இன்று வசதியற்ற மாணவர்கள் 435 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு வந்தது, தற்போது, அது ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு, கரோனா நிவாரண நிதியுதவி என ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு ரூ.4,500 வழங்கி யுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். ஆனால், ஸ்டாலின் அதிமுகவினர் பயன்பெறவே விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார். திமுகவினர் தான் அதிகப்படியான நிலத்தை வைத்துள்ளனர். எனவே, விவசாயக் கடன் தள்ளுபடியால் திமுகவினர் தான் அதிகம் பயன் பெற்றுள்ளனர். இது தெரியாத ஸ்டாலின், சிவகங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், விவசாயி களின் வாயில் விஷத்தை ஊற்றும் விஷக்கிருமி எடப்பாடி என வாய் கூசாமல் பேசுகிறார். ஸ்டாலினா விவசாயிகளுக்கு நன்மை செய்யப்போகிறார்?
தமிழகத்தில் அனைத்து துறை களிலும் முன்னோடி மாநில மாக தமிழகம் திகழ்கிறது. தமிழ கத்தில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு விளங்குகிறது. அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக் கும்’’ என்றார்.
இதில், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் முகமதுகாசிப், திருப்பத்தூர் மாவட்ட மருத்துவர் அணி மாவட்டஇணைச்செயலாளர் சையத் இத்ரிஸ்கபீல், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago