கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க ஆலோசனை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், துணை வாக் குச்சாவடி மையங்கள் அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண் குராலா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை,ரிஷிவந்தியம், சங்கராபுரம் கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி உளுந்தூர்பேட்டை தொகுதியில் 90, ரிஷிவந்தியம் தொகுதியில் 87, சங்கராபுரம் தொகுதியில் 93,கள்ளக்குறிச்சி தொகுதியில் 101 துணைவாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த், திருக் கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், தேர்தல் வட்டாட்சியர் (மணிகண்டன், கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்