புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடி மையம், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாளர்கள் ஒதுக்கீடு போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இத்தகைய பணிகள் தொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில், சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை செய்தார். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி விளக்கினார்.

இக்கூட்டத்தில், எஸ்.பி எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்