கூடுதலாக 536 துணை வாக்குச் சாவடிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 536 துணை வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் புதிய வரைமுறைப்படி 1,000-ம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.விஷ்ணு ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின், செய்தியாளர் களிடம் ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் கூடுத லாக 120 வாக்குச்சாவடிகள் சேர்த்து, மொத்தம் 428 வாக்குச் சாவடிகள் அமைகின்றன. அம்பாசமுத்திரத்தில் கூடுதலாக 71 சேர்த்து மொத்தம் 365, பாளையங்கோட்டையில் கூடுதலாக 145 சேர்த்து மொத்தம் 413, நாங்குநேரியில் கூடுதலாக 112 சேர்த்து மொத்தம் 411, ராதாபுரத்தில் கூடுதலாக 88 வாக்குச்சாவடிகள் சேர்த்து மொத்தம் 394 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் தற்போதுள்ள 1,475 வாக்குச்சாவடிகளுடன், கூடுதலாக 536 துணை வாக்குச்சாவடிகள் என்று மொத்தம் 2,011 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப்பின் இது நடைமுறையில் இருக்கும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மாவட்டத்தில் ஏற்கெனவே, 2,315 வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், 60 கட்டுப் பாட்டு இயந்திரங்கள், 36 விவிபாட் இயந்திரங்கள் இருந்தன. கூடுதலாக மகாராஷ் டிராவி லிருந்து 1,020 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,710 விவிபாட் இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த இயந்திரங்களை சரிபார் த்ததில் 3,319 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,506 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,653 விவிபாட் இயந்திரங்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன, என்று ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்