திருநெல்வேலியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம்முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க த்தைச் சேர்ந்த 200-க்கும் மேற் பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
`ரேஷன் கடை ஊழியர்கள் மீது உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையின் அத்துமீறிய கைது நடவடிக்கைகளை கைவிடவேண்டும். பாதிக்கப் பட்ட ஊழியர்களை மீண்டும் பணி அமர்வு செய்ய வேண்டும். பொதுவிநியோக திட்டத்துக்கென்று தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் முறையில் ஓ.எஸ். நிறுவன த்தை வெளியேற்ற வேண்டும். எடை குறைவான பொருட் களை விநியோகிக்கும் முறைக்கு மாற்றாக, பொட்டலம் முறையைக் கொண்டுவர வேண்டும்’ என வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையில் இருந்து, இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு, ஊர்வல மாக வந்த ரேஷன் ஊழியர்கள், அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ் தலைமைவகித்தார். ஊழியர்கள், 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago