10 மாதங்களுக்கு மேலாக கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து முடக்கம் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் அவதி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் - கேரளா இடையேயான பேருந்து போக்குவரத்து 10 மாதங் களுக்கு மேலாக தொடர்ந்து முடக்கப் பட்டுள்ளதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், வர்த்தக நிமித்தமாகவும் கேரளாவுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். இதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், கேரள மாநில மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்து போக்குவரத்தையே நம்பியு ள்ளனர்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடக்கப் பட்டது.

படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்துக்குள் பேருந்து போக்குவரத்து நடை பெற்று வருகிறது. மாநிலங்களுக்கு இடையே ரயில்கள் இயங்கினாலும், பேருந்து போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

தென்காசி வழியாக புனலூர், கொல்லம், ஆலப் புழா, திருவனந்தபுரம், கொட்டாரக்கரா, அச்சன்கோவில், எர்ணாகுளம், கோட்டயம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் கேரளாவுக்கு எளிதில் சென்றுவர முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

ரயில்களில் முன்பதி வில்லா பெட்டிகள் அனுமதிக்கப் படாததால் அவசரத் தேவைக்கு மாநிலங்களுக்கு இடையே சென்று வர முடியாத நிலை உள்ளது. வசதி உள்ளவர்கள் வாடகை வாகனங் கள், சொந்த வாகனங்களில் பயணிக்கின்றனர். ஆனால், ஏழை எளிய மக்கள் மாநிலங்களுக்கு இடையே எளிதில் சென்று வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தமிழக மக்கள் கேரள எல்லையான கோட்டைவாசல் வரை தமிழக அரசுப் பேருந்தில் சென்று, அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று கேரள மாநில பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதேபோல், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்துக்கு வரும் கேரள மாநில அரசுப் பேருந்து போக்குவரத்தும் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது.

தற்போது, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், வகுப்பு களுக்கு எளிதில் வந்து செல்ல முடியாமல் கேரள மாணவர்கள் அவதிப்படுகின்றனர். கேரளா- தமிழகம் இடையே பேருந்து சேவையை தொடங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று இரு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களும் எதிர்பார்க் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்