3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

By செய்திப்பிரிவு

வேலூரில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கம் வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு,மாவட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளி களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோர் களுக்கு ரூ.5 ஆயிரமும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

திருப்பத்தூர்

இதேபோல், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியேறும் போராட் டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜான்சிராணி, மாநிலச் செயலாளர் நம்புராஜன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத் தனர்.

திருவண்ணாமலை

இதேபோல், தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ரமேஷ் உட்பட 138 மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்