திருப்பத்தூர் அடுத்த பா.முத்தம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், கந்திலி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, நாட்றாம் பள்ளி, குடியாத்தம், தி.மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 230-க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன.
எருது விடும் விழாவையொட்டி வருவாய் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய போட்டி நண்பகல் 1.30 மணியளவில் முடிவுற்றது.
அவிழ்த்து விடப்பட்ட காளைகள் குறிப்பிட்ட தொலைவை வேகமாக கடந்துச்சென்றன. அப்போது, எருதுகளை பின்தொடர்ந்து சென்றதில் 30-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள், உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் பங்கேற்று குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நிமிடங்களில் கடந்துச்சென்ற காளைகளின் உரிமை யாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago