மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், மேடை நாடக நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கக் கோரி நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடகம், நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை மேடை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், மேடை நாடக நடிகர்கள், நடிகைகள், ஒப்பனையாளர், இசையமைப்பாளர்கள், மேடை பணியாளர்கள், நாடக அரங்க அமைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எவ்வித வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர்.

கலைஞர்களுக்கு வேறு எந்த ஒரு தொழிலும் செய்ய தெரியாத காரணத்தால், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். ஒரு சிலர் கடன் சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுநிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து கரோனா ஊரடங்கில் கடந்த ஜனவரி மாதம் தளர்வு அறிவிக்கப்பட்டது. எனினும், கிராமப்புறங்களில் நாடகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள போலீஸாரிடம் அனுமதி கோரும்போது, அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, மேடை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து, எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்