விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வருவோரில் சிலர், தீக்குளிப்பதை தடுக்கும் வகையில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடை பெறுகிறது. இதே போல மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி தலைமையிலான போலீஸார் புகார்களை பெற்றுசம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத சிலர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீஸார் சோதனைக்கு பிறகே, பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கின்றனர்.
அப்படியும் சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் குறை கேட்புக்கூட்டம் நடைபெறும் நாட்களில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்த ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார். தீத்தடுப்பு கருவிகளுடன் தீயணைப்பு வாகனம் மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று நிறுத்தப்பட்டிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago