என்எல்சி நிறுவனம் நடத்திய பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி நெய்வேலியில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுதொடர்பாக கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என்எல்சி நிறுவனத்தில் 259 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் 1,582 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சதவீதத்திற்கு குறைவாக தேர்வாகியுள்ளனர். இது தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே இந்த நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக எழுத்து தேர்வை நடத்தவேண்டும். அதில் தமிழக இளைஞர்களுக்கு குறிப்பாக கடலூர்மாவட்ட இளைஞர்களுக்கும், என்எல்சி நிறுவனத்திற்குநிலம் கொடுத் தவர்களின் வாரிசுகளுக்கும், ஓய்வு பெற்ற குடும்பங்களின் வாரிசுகளுக்கும், என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று(பிப்.9) காலை 9 மணி அளவில் நெய் வேலி டவுன்ஷிப் வட்டம் 8 பெரியார் சதுக்கம் அருகில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago