கரசானூர், புளிச்சப்பள்ளம் கிராமங்களுக்கு மனைப்பட்டா வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிக்க முடிவு

By செய்திப்பிரிவு

வானூர் அருகே புளிச்சபள்ளத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி மற்றும் 26 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட் டத்தில், சங்கம் தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சாதிச் சான்று மற்றும் மனைப் பட்டா வேண்டி போராடி வருகிறோம். இருப்பினும் இன்றும் பல கிராமங்களில் பழங்குடியினருக்கு மனைப் பட்டா, சாதிச்சான்று வழங்காமல் இருப்பதாக கண் டனம் தெரிவிக்கப்பட்டது.

வரும் தேர்தலில் வாக்களிப் பதற்காக வேட்பாளர் களிடம் இருந்து யாராவது பணம் பெற்றால், அவர்களை சங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. சங்க உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண் டாம். இதுவரை மனைப்பட்டா வழங்கப்படாத கரசானூர், வானூர், புளிச்சப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்புகளில் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. மனைப் பட்டா மற்றும் சாதிச் சான்று வழங்க வேண்டி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மார்ச் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்