மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் புலவேந்தன் மகன் பிரகாஷ் ( 25). ஆயங்குடியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் கடந்த 9.12.2018-ல் தண்ணீர் எடுப்பதற்காக வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற பிரகாஷ் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். மாணவி அலறியதால் பிரகாஷ் அங்கிருந்து ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த மாணவியின் உறவினர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி புகாரின் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் மேரி வழக்குப்பதிவு செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எழிலரசி இவ்வழக்கில் பிரகாஷூக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதிகளின் படி 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்